சிக்கன் குழம்பு (6)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 400 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி - 15
கலந்த மிளகாய் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 7
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
கசகசா - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
வெங்காயம் - 1
பிரிஞ்சி இலை - 3
பட்டை - 1
ஏலக்காய் - 1
எலுமிச்சைப்பழம் - அரை பாகம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாய் இரண்டாக கீறிக் கொள்ளவும். சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய்துருவல், முந்திரி, கசகசா, சோம்பு தூள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்ததும் வெங்காயம் சேர்த்து 40 நொடிகள் வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு பிறகு தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிரட்டிய சிக்கனுடன் மிளகாய் தூள் சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு சிக்கன் குழம்பை ஒரு தட்டு வைத்து மூடி 15 நிமிடம் வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி மீண்டும் மூடி வைத்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும். கடைசியில் அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். பிறகு பரிமாறவும்.