சிக்கன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 200 கிராம்

கலந்த மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு - 15 பல்

இஞ்சி - 2 அங்குலத் துண்டு

தேங்காய் துருவல் - 1/4 கப்

சோம்பு - 1/2 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலத் துண்டு

கிராம்பு - 2

எலுமிச்சை - பாதி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

பின் வதக்கியவற்றை குக்கரில் போட்டு தேங்காய் விழுது சேர்த்து பிரட்டிவிடவும்.

அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்துவிடவும்.

பிறகு மேலும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மூன்று விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கிவிடவும். பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்: