சிக்கன் உருண்டைகுழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் (தோல் நீக்கியது) – 1/4 கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 2

புளி – எலுமிச்சை அளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பொட்டுகடலை - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

சோம்பு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை - தேவையான அளவு

கிராம்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள:

தேங்காய் - தேவையான அளவு

கசகசா - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதக்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

புளியினை 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். புளி தண்ணீருடன் தூள் வகைகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் அந்த புளி கலவையை அந்த கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.

சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

பின் மீதி வெங்காயம், பொட்டு கடலை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன், தூள் வகைகள், அரைத்த வெங்காய பொட்டு கடலை விழுது, இஞ்சி பூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிக்கன் கலவையினை சிறுது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

தேங்காய், கசகசா சிறுது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.

புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு தேங்காய விழுதினை சேர்த்து வேகவிடவும்.

கொதிக்கும் பொழுது உருட்டி வைத்துள்ள சிக்கனன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக மெதுவாக போடவும்.

10 நிமிடங்கள் கழித்து சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.

கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். ரெடி.

குறிப்புகள்: