கோழி மசாலா
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 7
பச்சை மிளகாய் - 3
மிளகாய் வற்றல் - 10
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, 5 வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் கோழி துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 விசில் வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரம் மசாலா, நறுக்கிய 2 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் வேக வைத்த கோழி கறி சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்து பரிமாறவும்.