கோழி குழம்பு (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. கோழி - 1 கிலோ

2. வெங்காயம் - 1 (அல்லது) 15 சின்ன வெங்காயம்

3. தக்காளி - 1

4. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

6. கறிவேப்பிலை - சிறிது

9. இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி

10. பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி

7. உப்பு - தேவையான அளவு

அரைக்க:

1. மிளகாய் வற்றல் - 10

2. மல்லி - 1/2 மேஜைக்கரண்டி

3. ஏலக்காய் - 3

4. மிளகு - 1/2 தேக்கரண்டி

5. சீரகம் - 1/2 தேக்கரண்டி

6. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி

7. பட்டை - 1

8. லவங்கம் - 3

9. கறிவேப்பிலை - கொஞ்சம்

10. தேங்காய் - 1/4 (அல்லது) 1 கப் தேங்காய் பால்

செய்முறை:

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) வறுத்து வைக்கவும்.

இத்துடன் தேங்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

கோழி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

கோழி வெந்ததும் அரைத்த மசாலா (தேங்காய் அரைக்காவிட்டால், தேங்காய் பால் சேர்க்கவும்), தேவையான தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: