கோழி குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வதக்கி அரைக்க:

சின்ன வெங்காயம் - 15

இஞ்சி - ஒரு அங்குல துண்டு

பூண்டு - 6 பல்

சோம்பு - 1 தேக்கரண்டி

கிராம்பு - 2

பட்டை - ஒரு அங்குல துண்டு

கறி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு, சோம்பு, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அரைக்க கொடுத்துள்ளவற்றில் கறி மிளகாய் தூள் தவிர மற்ற பொருட்களை வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் அதனுடன் கறி மிளகாய் தூள் சேர்த்து மைய அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, சிக்கனைப் போட்டு வதக்கவும்.

சிக்கன் சிறிது வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

சிக்கன் வெந்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கொதி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுலபமான, சுவையான கோழி குழம்பு தயார்.

குறிப்புகள்: