கோழிக்குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 6 பல்
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கறிக்குழம்பு கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கோழிக்கறி, அரை தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள்தூள் போட்டு நல்ல வாசம் வரும் வரை வதக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்தவுடன் கோழிக்கறியை சேர்க்கவும். கோழிக்கறி வெந்தவுடன் கரம்மசாலாவுடன் பூண்டை சேர்த்து கலந்து குழம்பில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.