கோழிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 6

தேங்காய் - 2 சில்

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி

பட்டை - 1

கிராம்பு, இலை - 1

கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை மல்லித்தழை போட்டு வதக்கவும்.

மிளகு, சீரகம், சோம்பு மஞ்சள் தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, சிறிது இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

வதங்கியவற்றுடன் கோழியையும் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு வதக்கி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

தேங்காயுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். குழம்பு கொதித்து கோழி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: