கேரளா மீன் கறி
தேவையான பொருட்கள்:
அய்கோரா அல்லது ஆவோலி அல்லது மத்தி மீன் - 8 துண்டுகள்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 தேக்கரண்டி
நான்காக நறுக்கிய சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய தக்காளி - 1
புளிக்கரைசல் - 1/4 கப் அல்லது 3 குடம்புளி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் அல்லது தேங்காய் அரைத்தது - 1 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு மண்கலத்தில் தேங்காய் எண்ணெயை காயவிட்டு அதில் வெந்தயத்தை போட்டு பொன்னிறமாக மாறியதும் வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் தக்காளியை போட்டு வதக்கி புளிக்கரைசல் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் மீன் சேர்த்து உப்பு போட்டு கிளறி மூடியிட்டு 15 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
15 நிமிடத்தில் மீன் வெந்திருக்கும் பிறகு அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலையை போட்டு மூடி வைக்கவும்.
குறிப்புகள்:
இந்த மீன் கறியை பரிமாறுவதற்கு 2 மணிநேரம் முன்பே செய்து வைத்தால் தான் மீனில் உப்பும், மசாலாவும் இறங்கி சுவையாக இருக்கும்.