கறிகோலா உருண்டைக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி - 250 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

வரமிளகாய் - 8

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5 பல்

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 50 கிராம்

பச்சைமிளகாய் - 3

முட்டை - 1

உப்பு - தேவையான அளவு

குழம்பிற்கு தேவையானவை:

மிளகாய் - 7

மல்லி - 3 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5 பல்

புளி - நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்துக்கறியை கழுவி பிழிந்து எடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் மிதமான தீயில் வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். வற்றும் வரை கிளற வேண்டும்.

பொட்டுக்கடலையை தூளக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு துருவிய தேங்காய், மிளகாய், சோம்பு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், ஒரு பட்டை (தேவையென்றால்), கசகசா ஆகியவற்றை வதக்கி தண்ணீர் ஊற்றாமல் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து கொத்துக்கறியுடன் அரைத்து கொள்ளவும்.

இதனுடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசையவும். முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து நன்கு அடித்து அரைத்தவற்றுடன் சேர்த்து பிசையவும். கெட்டியாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் மேலும் பொட்டுக்கடலை மாவை சேர்த்துக் கொள்ளலாம். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

குழம்பு செய்முறை:

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம் ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் பொரியவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவை போட்டு கிளறி, புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்தவுடன் 5 (அல்லது) 6 உருண்டைகளாக போட வேண்டும். உருண்டைகள் வெந்து குழம்பு ஒரளவு வற்றியவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: