எலும்பு குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 4

பச்சைமிளகாய் - 4

முருங்கைக்காய் - 2

கத்தரிக்காய் - 1/4 கிலோ

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

புளி - எலுமிச்சையளவு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

இஞ்சி - சிறிது

தேங்காய் - 4 சில்

கசகசா - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய், கசகசா இரண்டையும் தனியாக அரைக்கவேண்டும். மஞ்சள், சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தனியாக அரைக்கவேண்டும்.

குக்கரில் அரைத்தவை, எலும்பு, பாதி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றுடன் 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி 7 விசில் வைக்க வேண்டும். அடுப்பை குறைத்து 10 நிமிடம் வைக்கவேண்டும்.

பிரஷர் அடங்கியவுடன் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கிச்சேர்த்து, முருங்கைக்காய், கத்தரிக்காய், ஆகியவற்றை நறுக்கிச்சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

பிறகு வதக்கிய காய்கறிகளை குக்கரில் சேர்க்கவும். புளியை அரை கிளஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவேண்டும். தேங்காயை ஊற்றி கொதிக்கவிடவேண்டும்

குறிப்புகள்: