ஈஸி சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 3 பல்
சக்தி சிக்கன் மசாலா தூள் - 4 மேசைக்கரண்டி
மல்லி தூள் - 8 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 4 இணுக்கு
கடுகு - சிறிது
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கைப்பிடி அளவு வெங்காயத்தை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள வெங்காயத்தை வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும். பாதி வதங்கும் நிலையில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவிட்டு தேங்காய், சிக்கன் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, எடுத்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சிக்கனை சேர்த்து வேக விடவும்.
கால் பதம் வெந்தவுடனே அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்தவுடன் மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும்.