ஸுக்னி ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸுக்னி - ஒன்று

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

------------------

தாளிக்க:

-----------------

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

வெண்ணெய் - சிறு துண்டு

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - ஒன்று

பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிது

எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஸுக்னியை கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

ஸுக்னியை தோலோடு காரட் துருவலை வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் இதனுடன் காரட் துருவலையும் சேர்த்து செய்யலாம்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போட்டு சூடேறியதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வதக்கவும். அதில் துருவி வைத்திருக்கும் ஸுக்னியை போடவும்.

துருவிய ஸுக்னியை சேர்த்த பின்னர் ஒரு முறை நன்கு கிளறி விடவும்.

ஸுக்னி நன்கு வதங்கியதும் அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

அதன் பிறகு களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு மூடி வைத்து வேக விடவும்.

வெந்ததும் இறக்கி வைத்து ஆறியதும் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து விடவும். உடலிற்கு சத்தான ஸுக்கினி ரைஸ் தயார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: