வெஜ் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்

வேக வைத்த பச்சை பட்டாணி - 1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கேரட் - 2 மேஜைக்கரண்டி

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 2 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

பட்டை - 1 சிறு துண்டு

லவங்கம் - 4

பிரியாணி இலை - 1

கொத்தமல்லி , புதினா - கொஞ்சம்

கெட்டியான தேங்காய் பால் - 3/4 கப்

தண்ணீர் - 1 கப்

செய்முறை:

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊர வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும்.

இதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

சிவந்ததும் காய்கறி எல்லாம் சேர்த்து கிளறவும்.

இப்போது ஊர வைத்த அரிசி, உப்பு, தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிறுந்தீயில் மூடி போட்டு சாதம் வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.

குறிப்புகள்:

தண்ணீர் வற்றவும், சாதம் வேகவும் சரியாக இருக்கும்.

அடிக்கடி கிளர வேண்டாம். சாதம் குழைந்துவிடும். பக்குவமாக கிளரி விடவும்.

விரும்பினால் நறுக்கிய குடைமிளகாய், காளிபிளவர் கூட சேர்க்கலாம்.