வெஜிடபுள் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 4 டம்ளர்

பெரிய வெங்காயம் - 6

காரட் - 4

பீன்ஸ் - 25

குடை மிளகாய் - ஒன்று

உருளைக்கிழங்கு - ஒன்று

சின்ன பச்சை மிளகாய் - 12

இஞ்சி - 3 அங்குலத் துண்டு

பூண்டு - 15 பல்

தக்காளி - 2

கசகசா - ஒரு மேசைக்கரண்டி

ஏலக்காய் - 3

கிராம்பு - 4

எண்ணெய் - ஒரு கப்

பிரிஞ்சி இலை - ஒன்று

பட்டை - 2 அங்குலத் துண்டு

ரோஜா மொக்கு - ஒன்று

சோம்பு - அரை மேசைக்கரண்டி

கல் உப்பு - 2 1/2 மேசைக்கரண்டி

மீல் மேக்கர் - 35

புதினா- கால் கப்

செய்முறை:

பீன்ஸை இரண்டு அங்குல துண்டுகளாக நறுக்கி நீளவாக்கில் கீறி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்.

குடைமிளகாயை சிறிது சிறிதாக நறுக்கவும். காரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரை போட்டு 10 நிமிடம் கழித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, ரோஜா மொக்கு ஆகியவற்றை போட்டு 15 நொடி வதக்கிய பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.,

வெங்காயம் வதங்கியப் பிறகு அரைத்த இஞ்சிm பூண்டு, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி விட்டு கசகசா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறி எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் 15 நொடி வரை வதக்கவும்.

வதங்கிய காய்கறியில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து வேக விடவும்.

5 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கிளறி விட்டு அரிசியை களைந்து அதில் போட்டு கிளறி ஒரு தட்டு வைத்து மூடி விடவும்.

ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திறந்து கிளறி விடவும். இதைப் போல ஆறுமுறை கிளறவும்.

கிளறிய பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மீல் மேக்கரை சேர்த்து கிளறி விடவும்.

கடைசியில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து இறக்கி விடவும்.

சுவையான வெஜிடபுள் ரைஸ் தயார்.

குறிப்புகள்: