வெஜிடபிள் ஃபரைடு ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

மெலிதாக நீளமாக நறுக்கிய கேரட் - கால் கப்

மெலிதாக நீளமாக நறுக்கிய பீன்ஸ் - கால் கப்

மெலிதாக நீளமாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் - அரை கப்

பச்சை பட்டாணி - சிறிதளவு

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - கால் கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை மேசைக்கரண்டி

நசுக்கிய பூண்டு - சிறிதளவு

வெங்காயத்தாள் - சிறிதளவு

வெள்ளை மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை தண்ணீரில் களைந்து பின் தண்ணீரை முழுவதுமாக வடிக்கட்டவும். பின் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அரிசியை போட்டு லேசாக வறுத்து பின் 1 1/2 அல்லது 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். சாதம் வெந்த பின் தட்டில் கொட்டி ஆறவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

பின் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பட்டாணி போட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கிய பின் வேகவைத்த சாதம், உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

நீளமாக நறுக்கிய கோஸ், பேபிகார்ன், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளும் வதக்கும் போது சேர்க்கலாம்.

வெள்ளை மிளகுத்தூளுக்கு பதில் கருப்பு மிளகுத்தூள் சேர்க்கலாம்.