மஷ்ரும் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டை மஷ்ரும் - ஒன்று பெரியது

காரட் - ஒன்று

பச்சை பட்டாணி - ஒரு கப்

கார்ன் - ஒரு கப்

பட்டை - 3

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - ஒன்று

பச்சை மிளகாய் - 2

புதினா - 10 இதழ்

கறிவேப்பிலை - 5 இதழ்

மல்லி தழை - சிறிது

ஸ்ப்ரிங் ஆனியன் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தாளிக்க

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். காய்களை பொடிபொடியாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியை முக்கால்வாசி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த நீரில் ஒரு பட்டை

ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் போடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை

ஏலக்காயை போட்டு பொரிய விட்டு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பின் அதில் பட்டாணி மற்றும் கார்னை சேர்த்து வதக்கி விடவும்.

பின் தழை வகைகளை சேர்த்து வதக்கவும்.

கேரட் சேர்த்து வதக்கி சிறிது உப்பு போடவும். ஐந்து நிமிடம் கழித்து பொடியாய் நறுக்கி வைத்துள்ள மஸ்ருமை சேர்த்து வதக்கவும்.

இதன் இடையில் அரிசி முக்கால் பதம் வெந்ததும்

வடிக்கவும். அதன் சூட்டிலேயே அரிசி வெந்துவிடும். சாதத்தின் மீது பொடியாய் நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியனை சேர்க்கவும்.

பின் சாதத்தை கடாயில் கொட்டி ஒன்று சேர கிளறவும். உப்பை சரிப் பார்க்கவும். சிம்பிளான மஷ்ரும் புலாவ் ரெடி.

குறிப்புகள்: