பேச்சுலர்ஸ் முட்டை ஃபிரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - இரண்டு கோப்பை

முட்டை - இரண்டு

நறுக்கிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு நசுக்கியது - தலா ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி

குடைமிளகாய், கேரட், பட்டாணி - தலா கால்கோப்பை

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி - இரண்டு தேக்கரண்டி.

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மைக்ரோஅவனில் வைக்கக்கூடிய பீங்கான் கோப்பையில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டைப் போட்டு அவனில் ஐந்து நிமிடம் வேகவிடவும்.

பிறகு அதை வெளியில் எடுத்து வேகவைத்த சாதம், காய்கறிகள், உப்புத்தூள், மிளகுத்தூள் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி மைக்ரோஅவனில் எட்டு நிமிடத்திற்கு வேகவிடவும்.

பிறகு அதன் மீது சாஸ் வகைகளை மேலாக ஊற்றி நன்கு கலக்கி மீண்டும் இரண்டு நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத்தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: