புளியோதரை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கப்

தண்ணீர் - இரண்டரை கப்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் - 8

மல்லிவிதை - 2 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 4 தேக்கரண்டி

நிலக்கடலை - ஒரு கைப்பிடி(தேவையென்றால்)

வெந்தயம் - கால் தேக்கரண்டி

வெல்லம் - நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

புளியை சிறிது தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, மல்லி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு பொடி செய்து கொள்ளவும்.

சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் மீதமுள்ள இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும்.

பிறகு புளியை நன்கு கெட்டியாய் கரைத்து இதில் ஊற்றி மேலும் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

உப்பு, வெல்லம், மஞ்சள்தூளையும் இதில் போட்டு கிளறி கொதிக்க விடவும்.

கரைசல் சுண்டி வரும்போது இடித்து வைத்துள்ள மிளகாய்ப் பொடியையும் போட்டுக் கிளறி பின் ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.

புளிக்காய்ச்சல் சாதம் முழுவதும் நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும்.

குறிப்புகள்: