புதினாசாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

புதினா - 1 கட்டு

ரெட் பீன்ஸ் - 50 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

மிளகு - 1/4 டீஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

ஏலம் - 2

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

செய்முறை:

புதினாவை சிறிது நெய்யில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.

மிளகை பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் மீதமுள்ள நெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்துபொடியாக அரிந்த வெங்காயம், நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அரிசியை கழுவி, இந்த கலவையில் சேர்த்து வதக்கி ரெட் பீன்ஸ், உப்பு சேர்த்து 3 டம்ளர் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

சாதம் பொலபொல வென்றானதும் அடுப்பை சற்று நேரம் சிம்மில் வைக்கவும்.

குறிப்புகள்:

ரெட் பீன்ஸ் விரும்பாதவர்கள் டபுள் பீன்ஸ், பச்சை பட்டாணி, வெள்ளை கொண்டைக்கடலை போன்ற ஏதாவது ஒன்றினை சேர்க்கலாம்.

உலர்ந்த நிலையில் உள்ள பருப்பு வகைகள் ஊற வைக்கப்படவேண்டும்