பட்டாணி கோஸ் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை கோஸ் - ஒரு கப்

பச்சை பட்டாணி - அரை கப்

சின்ன வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 3

உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - சிறிது

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க

மிளகாய் தூள், மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு ஏற்ப

கொத்தமல்லி - சிறிது

சாதம் - ஒரு கப்

செய்முறை:

முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கவும்.

பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்., மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

தண்ணீர் நன்கு சுண்டியதும் சாதத்தை சேர்க்கவும்.

மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிண்டி எடுக்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: