நெய் சோறு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 300 மில்லி

தேங்காய்ப்பால் - 500 மில்லி

வெங்காயம் - பாதி (பெரியது)

தயிர் - 2 மேசைக்கரண்டி

இஞ்சி - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 1 மேசைக்கரண்டி

கருவா - சிறியது

ரம்பை இலை - பாதி

ஏலம் - 3

செய்முறை:

அடுப்பில் சட்டியை வைத்து நெய் ஊற்றி கருவா, ஏலம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின்னர் தயிர் ஊற்றி ரம்பை இலை போட்டு, அதன் பின் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு தேங்காய்ப்பால் ஊற்றி கொதித்ததும் உப்பு போட்டு, அரிசியை கழுவி சேர்த்து ரைஸ் குக்கருக்கு மாற்றி வேகவிடவும்.

சோறு வெந்ததும் சிறிது முந்திரி, திராட்சையை நெய்யில் பொரித்து போடவும்

குறிப்புகள்: