தேங்காய் பால் சாதம் (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 1/2 கப்

இஞ்சி - 250 கிராம்

பூண்டு - 10 பல்லு

மிளகாய் - 4

புதினா - 25 கிராம்

தேங்காய் - ஒன்று

பட்டை கிராம்பு - 25 கிராம்

பிரிஞ்சி இலை - ஒன்று

நெய் - 25 கிராம்

முந்திரி - 100 கிராம்

வெங்காயம் - 200 கிராம்

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் முந்திரி, நறுக்கிய வெங்காயம், புதினா ஆகியவற்றையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.

ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு தேங்காய் பால் 2 டம்ளர் அதில் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அரிசியை களைத்து அதில் போட்டு கிளறி விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்:

தேவையானவற்றை சிவக்க வதக்கியவுடன் பால் சேர்த்து அரிசியை போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு குக்கரில் வைத்து 3 விசிலும் கொடுத்து இறக்கலாம்.