டூ இன் ஒன் கஞ்சி (ரமலான்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நொய் - கால் டம்ளர்(அரிசி மிக்சியில் பொடித்து கொள்ளவும்)

பச்சை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (லேசாக வறுத்து கொள்ளவும்)

பூண்டு - 2 பல்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

பட்டை - ஒன்று

வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:

முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர் அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பூண்டு, மிளகு, சீரகம் போட்டு உப்பும் சேர்த்து பிரஷர் குக்கரில் 3 விசில் வந்ததும் சிம்மில் வைத்து விடவும்.

தனியாக சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய பட்டை, பாதி வெங்காயம், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன் கால் டம்ளர் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கஞ்சியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவேண்டும்

இதனை பருப்பு துவையல் (அ) தேங்காய் சட்னி (அ) நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்

குறிப்புகள்:

நோன்பில் 30 நாளில் ஓரிரு முறை செய்யலாம் (அ) ஜுரத்திற்கும் சாப்பிடலாம்.

நோன்பில் லைட்டாக வேண்டுமானால் இந்த கஞ்சி சாப்பிடலாம், ஜுரம் சமயத்தில் குடித்தால் வாய்க்கு ருசி படும். கேஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இதில் பூண்டு இரண்டு பல்லுக்கு பதில் சேர்த்து செய்யுங்கள்