சாம்பார் சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

-----------------------------

வறுத்து அரைக்க:

-------------------------------

தனியா - 3 டீ ஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீ ஸ்பூன்

சீரகம் அரை - டீ ஸ்பூன்

மிளகு கால் - டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்

அரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு - அரை கப்

சின்ன வெங்காயம் - 10

குடை மிளகாய் - 1

பீன்ஸ் - 1௦

காரட் - 1

தக்காளி - 2

காய்கறி - அவரவர்களுக்கு விருப்பமாக காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.

துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

-------------------------

தாளிக்க

------------------------

கடுகு - தாளிக்க

முந்திரி - 10

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களில் தனியா, காய்ந்த மிளகாய் தவிர மற்ற பொருட்களை எல்லாம் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு தனியாவை வறுக்கவும். கடைசியாக வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.

கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகளை சன்னமாக நறுக்கி, வாயன்ற ஒரு பாத்திரத்தில் தக்காளி நீங்கலாக மற்றவற்றைப் போட்டு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வாங்கியதும் புளி கரைசலை அதில் சேர்த்து உப்பு மற்றும் சாம்பார் பொடி,தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு குக்கரில் உள்ள பருப்பு சாதத்தை இத்துடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் மேலே தூவி, நன்கு கிளறவும்.

பிறகு கடுகு, முந்திரி, பெருங்காயம், கரிவேபஈளை எல்லாம் தாளிக்கவும்.

பரிமாறும் பொது சிறிது நெய் கலந்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் மொத்தமாக (எண்ணெய் சேர்க்காமல்) அரைத்து பத்திர படுத்தி வைத்துக் கொண்டுவிட்டால், சுவையான சாம்பார் சாதம் மிக எளிதாக செய்துவிடலாம்.