குடைமிளகாய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறுத் துண்டு

சிகப்பு பச்சை குடைமிளகாய் - தலா கால் பாகம்

கார்ன் - கால் கப்

கடுகு, சீரகம் - தாளிக்க

உளுந்து, கடலை பருப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப

மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப எண்ணெய்

நெய் - தேவைக்கு ஏற்ப

எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி நறுக்கவும். குடைமிளகாய்களை சிறு சதுரமாக நறுக்கவும்.

சாதத்தை சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.

எண்ணெய் + நெய் கலவை சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பருப்புகள், வெங்காயம். பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் குடைமிளகாய், கார்ன் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிறுதீயில் வைத்து ஆற வைத்த சாதம் சேர்க்கவும்.

பின்பு மிளகுதூள் தேவைக்கு ஏற்ப உப்பு கொத்தமல்லி தூவி கிளறவும். கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: