கிட்ஸ் பர்புள் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்

பர்புல் கேபேஜ் துருவல் -1 கப்

மஞ்சள் பொடி – சிட்டிகை

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

பச்சைமிளாகாய் - 1 (விரும்பினால்)

வறுத்த வேர்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணை, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் கேபேஜ் துருவலை சேர்த்து ஒருநிமிடம் கிளறவும்…

அதில் தூள் வகைகள்,உப்பு சேர்த்து கிளறி ஒருநிமிடம் மிதமான தீயில்

மூடி வைக்கவும்..தண்ணீர் சேர்க்கவேண்டாம்..அதன் தண்ணீரிலேயே அது வெந்துவிடும்.நிறம் மாறக்கூடாது..சத்து போய்விடும்.

கடைசியாக வறுத்த வேர்க்கடலை,தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

குறிப்புகள்:

இதில் கேபேஜுக்கு பதில் ப்ரோகோலி (பச்சை காலிபிளவர்)லும் இதேபோல் செய்யலாம்.குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஈஸியான சத்தான உணவு.

இதில் வெங்காயம், மசாலாத்தூள், மிளககாய்த்தூள் போன்றவை சேர்த்தால் இது சாலட் காய் என்பதால் மசாலா சேராது மற்றும் இதன் இயற்கை சுவை போய்விடும்..காரம் எதுவும் சேர்க்காமலே சுவையாக இருக்கும்