கார்ன் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு டம்ளர்

உதிரி கார்ன் - கால் கப் (வெந்தது)

பீன்ஸ் - 4

கேரட் - இரண்டு இன்ச் அளவு

வெங்காயம் - ஒன்று

பச்சைமிளகாய் - 1

தேங்காய்பால் - 1/2 டம்ளர்

கொத்தமல்லிதழை - சிறிதளவு

---------------------------------

தாளிக்க:

------------------------------

பட்டை - ஒரு இன்ச் அளவு

கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று

பிரிஞ்சி இலை(பே லீஃப்) - பாதி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், பீன்ஸ், கேரட், மல்லி தழை இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். பின்பு அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்

தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.

பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஓரளவு வதங்கியதும் நறுக்கின பீன்ஸ், கேரட், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்பு கார்ன், மல்லி தழையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பின் ஊற வைத்திருக்கும் அரிசியை நன்கு தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

பிறகு தேங்காய் பாலும் ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சுண்டும் நிலை அடையும் சமையத்தில் மூடியை போட்டு மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் ஏழு நிமிடம் வைத்து இறக்கவும்.

ஸ்டீம் போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடிவரை கிளறி விட்டு வைக்கவும். இதை லன்ச் பாக்ஸிற்கு கொடுக்க எளிதாக இருக்கும். வெறுமெனவே சாப்பிட நல்ல மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்புகள்: