கருவேப்பிலை சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

முந்திரி - 15

கருவேப்பிலை - 2 கொத்து

நெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள்- 3 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை சுத்தம் செய்து பொல பொலவென்று வேக வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு சட்டியில் நெய் ஊற்றி கருவேப்பிலையை நன்கு வதக்கி ,முந்திரியையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்

பின் வேறு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,மிளகு தூள் சேர்த்து வதக்கி பின் வேகவைத்த சாதத்தை போட்டு வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்

குறிப்புகள்: