எள்ளு சாதம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை அல்லது கறுப்பு எள் - 4 டேஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்

நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எள்ளை ஊற வைத்து கல், மண் போக அரித்து எடுத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விடாமல் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, எள் போடவும்.

எள் படபடவென்று வெடித்ததும் பொடித்துக் கொள்ளவும்.

பொடியை உதிர் உதிராக வடித்த சாதத்தில் போட்டு உப்புத்தூள் சேர்த்துக் கிளறவும்.

நல்லெண்ணயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

குறிப்புகள்: