ஈஸி எக் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிர் உதிரான‌ சாதம் ‍- 2 கப்

முட்டை - 3

எண்ணெய் - 3 அல்லது 4 தேக்கரண்டி

தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப‌

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

தூள் வகைகள் என்பதால் எண்ணெய் சூட்டில் கருகி விடும். எனவே சிறிது (ஒரு கைப்பிடி) தண்ணீர் சேர்க்கவும்.

தூள் கலவையில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

முட்டை வெந்து கீமா பதத்திற்கு வரும் வரை கிளறவும். முட்டையுடன் வடித்த‌ சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

குறிப்புகள்: