அவன் சிக்கன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழிக் கால் - ஒரு கிலோ

பாசுமதி அரிசி - 750 கிராம்

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 5

குடைமிளகாய் - ஒன்று

தக்காளி - 2

தந்தூரிப் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 அல்லது 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழிக்காலை தோல் நீக்கி சுத்தம் செய்து ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கோழித் துண்டுகளுடன் தந்தூரிப் பவுடர்

உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைத்திருக்கவும். அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி உப்பு போட்டு வைக்கவும்.

அவனை முற்சூடு செய்து வைக்கவும். அவன் ட்ரேயில் பட்டர் தடவி கோழித்துண்டுகளை வைத்து அவனில் 200 F ல் வைக்கவும்.

30 நிமிடங்களுக்கு பின்னர் கோழித்துண்டுகளை திருப்பி விடவும்.

10 நிமிடங்களுக்கு பின் வெளியே எடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு மீண்டும் உள்ளே வைக்கவும்.

அதன் பின்னர் 10 நிமிடங்கள் கழித்து எடுத்து 2 கப் தண்ணீரில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்து அதில் ஊற்றி உள்ளே வைக்கவும்.

15 நிமிடத்திற்கு பின் எடுத்து முக்கால் பதம் வெந்த சாதத்தைப் போட்டு கிளறி அதன் மேல் குடைமிளகாயை தூவி மீண்டும் வைக்கவும்.

10 நிமிடம் ஆனதும் சாதத்தைக் கிளறி அவனில் வைக்கவும். 5 நிமிடத்திற்கு பின்பு வெளியே எடுக்கவும். அவனில் வைத்திருந்தால் சாதம் காய்ந்து விடும்.

சிக்கன் ரைஸ் ரெடி.

குறிப்புகள்:

வெங்காய தயிர் பச்சடி மற்றும் முட்டையுடன் பரிமாறவும்.