அரிசி பருப்பு சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டீ கப்

துவரம் பருப்பு - 3/4 டீ கப்

நெய் - 3 தேக்கரண்டி

பட்டை - அரை இன்ச் துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 3

வெந்தயம் - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2

இஞ்சி,பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

சதுரங்களாக நறுக்கிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 10 இலைகள்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கைப்பிடி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்

பின் ஒரு பரந்த குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.

அவை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் பருப்பு சேர்ப்பதால் 1 கப் சேர்த்து மொத்தம் 5 கப் தண்ணீர் ஊற்றவும்.

தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்து கழுவிய அரிசியையும், கழுவிய பருப்பையும் போட்டு குக்கரை மூடி விசில் இட்டு ஒரு விசில் வந்ததும் தீயை அணைத்து விடவும்.

ஒரு சில அரிசி சீக்கிரம் வேகும் அப்படி இருந்தால் ஒரு விசில் வருவதற்கு சற்று முன்பே தீயை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் திறந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை செய்து முடித்ததும் குக்கரை திறந்து ஒரு கிளறு கிளறி வைக்கவும். இல்லாவிட்டால் சாதம் கட்டை கட்டையாய் இருக்கும். இதனுடன் அப்பளம் இருந்தால் கூட சுவையாக இருக்கும். ஜலீலாவின் கள்ளுக் கடை முட்டை, கத்திரிக்காய் வறுவல் கூட சாப்பிட அமோகமாக இருக்கும்