வெங்காய ரசம் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

பருப்புத் தண்ணீர் - 2 கப்

தக்காளி - 1/2

சின்ன வெங்காயம் - 8

பெருங்காயம் - சிறிது

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

ரசப் பொடிக்கு பொடிக்க:

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

மிளகு - 1/2 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:

புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் கரைத்த புளி, பருப்புத் தண்ணீர், பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: