வல்லாரைக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வல்லாரை - ஒரு கட்டு

பூண்டு - 5 பல்

வெங்காயம் - 1

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

பால் - 1/4 கப்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வல்லாரையை சுத்தம் செய்து கழுவி எடுக்கவும்.

சிறிதளவு தண்ணீர் தெளித்து கீரையை பச்சை நிறமாக அரைப்பதமாக அவித்து எடுக்கவும்.

கீரை ஆறிய பின்பு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.

புளியை கரைத்து வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

பின்பு புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

மிளகாய்த்தூள் பச்சை வாசனை போன பின்பு பாலை சேர்க்கவும்.

கொதிக்கும் குழம்பிற்குள் வல்லாரைக் கலவையை ஊற்றவும்.

இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: