வத்தல் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 கிலோ

மிளகாய் வற்றல் - 20

வெந்தயம் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 கப்

புளிக்கரைச்சல் - 3 கப்

பெருங்காயம் - சின்ன நெல்லிக்காய் அளவு

மல்லித் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

எண்ணெய் - 1/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் வற்றலை இரண்டாக பிய்த்து விதையை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காயவிட்டு பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கி, வெந்தயம், கடுகு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு பிரட்டிவிடவும்.

அதனுடன் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள் போட்டு பிரட்டவும்.

நன்கு பிரட்டிவிட்டு புளிக்கரைச்சலை ஊற்றி, உப்பு மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளறிவிட்டு உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்.

அதனுடன் தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: