மாங்காய் பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1

துவரம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1/2 கப்

பூண்டு - 2 பல்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

துருவிய மாங்காயை ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

பருப்பை மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு கடுகு வெடித்தவுடன், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.

தண்ணீர் கொதிக்கும்போது, தீயை குறைத்து, வேக வைத்துள்ள பருப்பு மற்றும் மாங்காயை அதனுடன் சேர்க்கவும்.

பின்னர் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடம் வைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: