மசாலா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சைபயிறு - 200 கிராம்

கடலைப்பருப்பு - 200 கிராம்

துவரம்பருப்பு - 200 கிராம்

வெள்ளைக்காராமணி - 200 கிராம்

வெள்ளைக் கொண்டைகடலை - 200 கிராம்

மிளகாய் வற்றல் - 50 கிராம்

பூண்டு - 10 பல்

சோம்பு - 10 கிராம்

சீரகம் - 25 கிராம்

கடுகு - சிறிது

புளி - 100 கிராம்

தனியா பொடி - 2 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி

  • வெல்லம் - சிறுதுண்டு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெள்ளைக்காராமணி, கொண்டைகடலை ஆகியவற்றை ஊறவைத்துக் கொள்ளவும்.

    ஊறிய பின்பு இந்த கலவையுடன் 4 பல் பூண்டு, சோம்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் வடைமாவு போல் பதமாக அரைத்துக் கொள்ளவும்.

    இந்த விழுதை வாழை இலையில் வைத்து மூடி இட்லி பானையில் வேகவைக்கவும்.

    நன்கு வெந்தபின், அதை மீன் போன்ற வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை நல்லெண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

    புளியை 5 டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலில் 2 மேசைக்கரண்டி தனியாப் பொடி, 2 மேசைக்கரண்டி மிளகாய்ப் பொடி, ஒரு துண்டு வெல்லம், தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

    பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு வெடித்தவுடன், உரித்த பூண்டில் 5 பல் போட்டு சிவக்க வறுக்கவும்.

    அதில் கரைத்த புளி கரைசலை ஊற்றி சுமார் 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

    கெட்டியாக வரும் நேரத்தில், பொரித்த துண்டுகளை அதில் போட்டு 5 நிமிடம் மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

    குறிப்புகள்: