நவரத்தின கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 50 கிராம்

கொண்டைகடலை - 50 கிராம்

சோயா பீன்ஸ் - 50 கிராம்

மொச்சை - 50 கிராம்

பாசிப்பயிறு - 50 கிராம்

கறுப்பு கொண்டைகடலை - 50 கிராம்

ராஜ்மா - 50 கிராம்

காரட் - 50 கிராம்

உருளைக்கிழங்கு - 50 கிராம்

பீன்ஸ் - 10

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பல்

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

கறிவேப்பில்லை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.

சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டுவிழுது, கரம் மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.

உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.

இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: