தால் ஃபிரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு - 1 டம்ளர்

பெரிய வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 1

மஞ்சள் பொடி - 1 பின்ச்

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மிளகாய் வற்றல் - 2

நெய் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிறுபருப்பை சிவக்க வறுக்கவும். நன்கு அலம்பி மஞ்சள் பொடி சேர்த்து 1 1/2 டம்ளர் நீர் சேர்த்து ,வேக விடவும். நன்கு வெந்த பிறகு உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலைவ தக்கவும்.

நன்கு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி வதக்கவும்.

நன்கு மசிந்ததும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி வெந்த பாசிப்பருப்பை சேர்த்து கிளறி கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

நறுக்கிய மல்லித்தழை தூவி பரோட்டா, நாண், தோசை போன்றவற்றுடன் சாப்பிடலாம்.