கிட்ஸ் மோர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மோர் - 2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

வறுத்து பொடித்த தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

பச்சரிசி - 1 மேசைக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - சிறு பல்

சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது - 1 மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க

மோர் உருண்டைக்கு:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம்பருப்பு, அரிசி, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் மல்லிப்பொடி சேர்த்து மையாக அரைக்கவும்.

மோரில் அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அதோடு மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை வடைக்கு அரைப்பது போல் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அரிசி மாவு சேர்த்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த உருண்டைகளை மிதமான சூடு உள்ள நீரில் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின் தேங்காய் அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்.

பச்சை வாசனை போக தீயை மிதமாக வைத்து கொதிக்க விட்டு பின் மோரை ஊற்றி நுரைக்க கொதிக்க விடவும்.

நன்கு நுரைத்து வரும் போது உருண்டைகளை எடுத்து அதில் போடவும். மெதுவாக கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் சுவைக்கேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.