கறிவேப்பிலை குழம்பு (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 10 கொத்து

புளி எலுமிச்சை - அளவு

மல்லி கலந்த மிளகாய்த்தூள் - 10 கிராம்

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 7 பல்

வடகம் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை 2 நிமிஷம் வதக்கி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டினை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி வடகம் போட்டு 3 நொடிகள் வதக்கவும்.

பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

புளியை கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, மல்லி கலந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு கரைத்து எடுத்து வைக்கவும்.

வெங்காயம், பூண்டு வதங்கியதும் கரைத்த புளி கரைச்சலை ஊற்றி சிறிய தீயில் 10 நிமிஷம் கொதிக்க வைக்கவும்.

பின் அதில் எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: