சீப்புச்சீடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு படி

பொட்டுக்கடலை - ஒரு ஆழாக்கு

பெரிய தேங்காய் - 1

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரைத்து சலித்து வறுக்கவும். வறுத்த பிறகு மறுபடியும் சலிக்கவேண்டும். தேங்காயை ஆட்டி தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து பாலெடுக்கவும்.

அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும். பொட்டுக்கடலையை தூளாக்கி கொள்ளவும்.

அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, உப்பு ஆகியவற்றை தேங்காய்ப்பால் விட்டு பிசைந்து கொள்ளவும்.

சீப்புச்சீடை கட்டையில் மாவை வைத்து ஒரு பேப்பரில் நீளமாக பிழிந்து கொள்ளவும். பிழிந்ததை ஒரு விரல் நீளத்திற்கு வெட்டி கையில் வைத்து மோதிரம்போல் சுற்றி இரண்டு ஓரங்களையும் ஒட்டவும்.

இதேபோல் எல்லாவற்றையும் செய்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கொள்ளுமளவு போட்டு பொரிக்கவும்.

பொரிக்கும்போது எண்ணெயில் சலசலப்பு அடங்கியதும் எடுத்துவிடவும்.

குறிப்புகள்: