உளுந்து பூந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1/4 படி

பச்சரிசி - 2 கரண்டி

சர்க்கரை - 3/4 கிலோ

கலர் பொடி (பச்சை, சிவப்பு, கருப்பு) - சிறிது

முந்திரி - 25 என்னம்

உலர்ந்த் திராட்சை - 25 என்னம்

நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வெண்ணிலா எசன்ஸ் - 4 துளி

ஏலக்காய் - 10 என்னம்

கலர் தேங்காய் பூ - சிறிது

சைனா கல்கண்டு - 50 கிராம்

செய்முறை:

உளுந்து , அரிசியை 1/2 மணி ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதை போல் அரைக்கவும்.

அரைத்தமாவில் நாம் விரும்பும் வண்ணங்களை சேர்ப்பதற்காக தனித்தனி கிண்ணங்களில் பிரித்து வைத்து கலர் சேர்க்கவும்.

ஜீரா செய்ய :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி பதமான பாகாக காய்ச்சவும். இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்த்தும் அரிகரண்டியில் பூந்தி மாவை ஊற்றி தேய்க்கவும்.

பெரிய பெரிய மொட்டுக்களாக வரும் பொழுது பதமாக வெந்தபின் எடுத்து பாகில் போடவும்.

வேண்டும் என்றால் தனித்தனியாக பாகிலும் கலர் சேர்க்கலாம்.

இத்னுடன் ஏலக்காய், முந்திரி, திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

1/2 மணி நேரம் கழித்து ஊறிய பூந்தியை வேறு ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்து வைக்கவும்.

அதனுடன் கல்கண்டு, கலர் தேங்காய் பூ தூவி பறிமாறலாம்.

குறிப்புகள்: