ஸ்வீட்கான் சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லா சிக்கன் - 4 துண்டு

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெங்காயம் தக்காளி - 1+1

வெண்ணை - 1 தேக்கரண்டி

பட்டை கிராம்பு - தலா இரண்டு

பெப்பர் பவுடர் - தேவைக்கு ஏற்ப

ஸ்வீட்கான் - 3 தேக்கரண்டி

சோள மாவு - ஒரு தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்..

ஒரு குக்கரில் வெண்ணை விட்டு பட்டை கிராம்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் அதனுடன்கோழி,கான் உப்பு ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்..

குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தி..பிரசர் போனதும் குக்கரை திறந்து கான் மற்றும் கோழியை தனியே பிரித்து வைக்கவும்..

சூப் தண்ணியை வடிகட்டி அதனுடன் சோளமாவை சேர்த்து(சோள மாவை தனியாக கொஞ்சம் தண்ணியில் கலக்கி சூப் தண்ணீரில் சேர்க்கவும்) ஒரு கொத்தி வரும் வரை அடுப்பில் வைக்கவும்..

பின் அதனுடன் கோழி,கான் சேர்த்து பெப்பர் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக ஒரு பௌலில் மாற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: