வெஜிடபிள் பேபி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/2

கேரட் - 1/2

பீன்ஸ் - 6

பீட்ரூட் - 1/2

பீஸ் - 1/4 கப்

வெங்காயம் - 1

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி

பிரியாணி இலை - 1

குருமிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி அதனுடன் சீரகம், உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் விடவும்.

ஆவி அடங்கியதும் திறக்கவும். பிறகு வெண்ணெயை சூடாக்கி அதில் பிரியாணி இலை போட்டு வெந்த சூப்பை கொட்டி குருமிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: