பிரெஞ்சு வெங்காய சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் பெரியது - 4

க்ரீம் - 50 கிராம்

கார்ன்ஃப்ளார் - 1/2 மேசைக்கரண்டி

வெள்ளை மிளகுத்தூள் - 1/2 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெயை விட்டு, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறு தீயில் நிறம் மாறாதவாறு நன்கு வதக்கவும்.

இத்துடன் 4 கப் தண்ணீர் விட்டு வெயிட் போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்னர் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் பேஸ்ட் போல் கரைத்து குக்கரில் ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு தேவையான உப்பு, மிளகுத்தூள், க்ரீம் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் துண்டுகளோடு சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: