க்ரீம் ஆஃப் சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1

மேகி சிக்கன் கியூப் - ஒன்று சிறியது

க்ரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் - 1 1/2 பாக்கெட்

க்ரீம் ஆஃப் கார்ன் - 1 டின்

பட்டர் - 2 மேசைக்கரண்டி

கார்ன் ப்ளார் பவுடர் - 2 குழிக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு டிராப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் சிக்கனில் மேகி கியூப், உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும்.

ஒரு பெரிய சட்டியை காயவைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி பட்டர் போட்டு உருகும் முன் வடித்து வைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றவும்.

தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்கன் தண்ணீரில் ஊற்றவும்.

பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.

பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.

பிறகு கார்ன் பிளார் மாவை கரைத்து ஊற்றுங்கள்.

கடைசியில் இரண்டு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அணைக்கவும். அனைத்து விட்டு உப்பு, ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள், ஒரு டிராப் சோயாசாஸ், ஒரு மேசைக்கரண்டி பட்டர் ஊற்றி இறக்கி சுடசுட சூப் பவுலில் பரிமாறவும.

குறிப்புகள்: