க்ரீன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முளைக்கீரை - 1 கப்

முருங்கைக்கீரை - 2 கப்

மணத்தக்காளி கீரை - 1/2 கப்

பசலைக்கீரை - 1/2 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி

(இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 8 அல்லது 10 கப்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை:

பாதி வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை கீறி விட்டு தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்தவுடன் கீரை வகைகளை சுத்தம் செய்து, கழுவி அதில் போட்டு, (இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் சேர்க்கவும்.

கீரை வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, மீதி வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன் முறுகலானவுடன் சோம்புத்தூள் போட்டு தாளித்து, வேகவைத்துள்ள க்ரீன் சூப்பில் ஊற்றவும்.

குறிப்புகள்: