கோழி தக்காளி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு

நடுத்தரமான வெங்காயம் - 1/2

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறுதுண்டு

கொத்தமல்லித்தழை - சிறிது

முட்டை - 2

கார்ன்ஸ்டார்ச் - 2 மேசைக்கரண்டி

சிக்கன் ஸ்டாக் - 4 கப்

தக்காளி சாஸ் - 4 மேசைக்கரண்டி

சீனி - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

வினிகர் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக்.

முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.

பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து, தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.

இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும்.

அதன் பின் வினிகரை ஊற்றவும்.

அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும்.

முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: